×

தொழிலதிபர்களுக்குதான் மோடி காவலாளி: பிரசாரத்தில் பிராண்டிய சிக்சர் சித்து

மூன்றாம் கட்ட தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது ஜார்கண்ட். மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர், தன்பாத், கிரிதிஹ், சிங்பும் ஆகிய நான்கு  மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 12ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தொடரும் எதிர்ப்பலை காரணமாக பிரசாரத்தில் பின்தங்குகிறது தாமரை.  அதேசமயம், காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் களைகட்டுகிறது. கூட்டங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதாம்.

சிங்பும் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கீதா கோடாவை ஆதரித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய காங்கிரஸ் பிரமுகருமான ‘சிக்ஸர்’  சித்து ஆதித்யபூர் பகுதியில் பிரசாரம் செய்தார். கிரிக்கெட் வர்ணனைகளில் வரிக்கு வரி அடிக்கிற அதே நக்கல், நையாண்டி பிரசாரத்திலும்  எதிரொலித்தது. ‘‘பாஜ அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது. ஒருவேளை  தவறுதலாக இம்முறை பாஜவுக்கு ஓட்டுப் போட்டீர்களானால்... உங்கள் ைபயன் நன்றாகப் படித்தும் கூட எதிர்காலத்தில் டீ விற்பவராகவோ,  பக்கோடா போடுபவராகவோ... ஏன், சவுகீதாராகவோ (காவலாளி) மாறுகிற நிலைமை உருவாகி விடும்,’’ என்று அட்டாக் பண்ண, அர்த்தம் புரிந்து  ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம்.

அத்தோடு விட்டாரில்லை சித்து. ‘‘மோடியின் ஆட்சியில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு விட்டது. அம்பானி, அதானி போன்ற பெரு  முதலாளிகளின் வாழ்க்கைதான் உயர்ந்திருக்கிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது ஊழியர்களுக்கு ஊதியம் தர திண்டாடும்போது, தனியார்  செல்ேபான் நிறுவனங்களை கைதூக்கி விடுகிறார் மோடி. ஐந்தாண்டுகளுக்கு முன் ரூ.8 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய பெல் நிறுவனம் தற்ேபாது  நஷ்டத்தில் இயங்க யார் காரணம்? பொதுத்துறை நிறுவனங்களை அழித்து, தனியார் நிறுவனங்களை வளர்க்கிறது பாஜ அரசு. தன்னைத்தானே  காவலாளி (சவுகீதார்) என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். நமது கோடானுகோடி ரூபாய் சொத்துகளை திருடிவிட்டு நாட்டை விட்டு ஓடும்  தொழிலதிபர்களுக்குத்தான் அவர் காவலாளியே தவிர, சாதாரண அப்பாவி மக்களுக்கு அல்ல...’’ என்று கிரிக்கெட் போலவே, விளாசித்  தள்ளிவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Brindai Chiker Sidhu , For industrialists, Modi, the guardian, the chicker
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...