×

அடிஷியின் மதம் குறித்து பாஜ, காங்கிரஸ் சர்ச்சை ட்விட்டர் பதிவுக்கு விளக்கம் கேட்டு மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி : கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அடிஷியின் மதம் குறித்து பாஜ, காங்கிரஸ் கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் டிவிட்டர் பதிவு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் அடிஷி தனது பெயரில் இருந்து மர்லீனாவை நீக்கி விட்டதாக கடந்தாண்டு கூறினார். இனி தன் பெயர் அடிஷி சிங் என அழைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியிருந்தார்.

இது வாக்காளர்களை ஏமாற்றவும், சில குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுகளை பெறவும் எடுக்கப்பட்ட முடிவு என பாஜ, காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். தேர்தல் பிரசாரம் வேகமெடுத்துள்ள நிலையில், கடந்த 27ம் தேதி துணை முதல்வர் சிசோடியா டிவிட்டரில் ஒரு பதிவை ஹிந்தியில் போட்டியிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியும், பாஜவும் தவறான தகவலை பரப்பி வருகின்றன. அடிஷியின் முழு பெயர் அடிஷி சிங். அவர் ராஜபுத்ர பெண். முழுமையான சத்திரியர். ஜான்சி ராணி. அவர் வெற்றி பெயர். புதிய அத்தியாயம் படைப்பார்’’ என கூறியிருந்தார். இது தொடர்பாக மறு நாள் பாஜவின் டெல்லி பிரிவு தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது.

அதில், “ இதையேற்று கொண்ட கிழக்கு டெல்லி மக்களவை தேர்தல் அதிகாரி கே மகேஷ், ‘‘ அடிஷிக்கு ஆதரவான இந்த டிவிட்டர் பதிவு நடத்தை விதிகள் இணைப்பு 1  பாயிண்ட் 1ன்படி விதி மீறலாக தெரிகிறது. எனவே இன்று மாலை 5 மணிக்குள் உங்களது விளக்கத்தை என்னிடம் தெரிவிக்க வேண்டும் அப்படி தெரிவிக்க தவறினால் உங்களிடம் விளக்கம் எதுவும் இல்லை என்பதாக கருதப்படும்’’ என கூறி துணை முதல்வர் மணிஷ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு நோட்டீஸ்:
இதனிடையே, பூர்வாஞ்சல் மக்களையும், தனது தொழிலையும் கேவலப்படுத்தி வேண்டுமென்றே,  கெட்ட நோக்கத்துடன் பேசி வரும் முதல்வர் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, டெல்லி பாஜ தலைவரும், வடகிழக்கு டெல்லியின் வேட்பாளருமான மனோஜ் திவாரி  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருந்தார்.  ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப்  பாண்டேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் போது அவர் இதை தெரிவித்துள்ளார்.  மற்றொரு புகாரில், ஆம் ஆத்மி சாதனைப்பட்டியலை கடிதமாக  தொகுதியில்  வினியோகம் செய்து வருகிறது.

இது நடத்தை விதிகளுக்கு எதிரானது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த இரு புகார்கள் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பூர்வாஞ்சல் மக்களையும், தனது தொழிலையும் கேவலப்படுத்தி வேண்டுமென்றே, கெட்ட நோக்கத்துடன் பேசி  வருகிறார்

விதி மீறல் இல்லை கெஜ்ரிவால் விளக்கம்

‘‘வடமேற்கு டெல்லியின் பாஜ வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டார். அவர் தனி தொகுதியில் நிற்க முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவார். எனவே அவருக்கு வாக்களித்து வீண்டிக்க வேண்டாம். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருக்கு அந்த வாக்கை செலுத்துங்கள்’’ என முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரத்தின் போது பேசினார்.

இது தொடர்பாக பாஜவின் வீஜேந்தர் குப்தா டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதற்கு முதல்வர் கெஜ்ரிவால், வேட்பாளர் குகன் சிங், அமைச்சர் ராஜேந்தர் பால் கவுதம் ஆகியோருக்கு  விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. கெஜ்ரிவால் அளித்துள்ள பதிலில், நடத்தை விதி மீறல்கள் எதுவும் இல்லை’ என கூறியுள்ளார். இது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manisha Sisodia ,Bhattacharjee ,Election Commission ,Adi , Adarsh's religion, Bhaj, Congress controversy, Manish Sisodia, notices, Election Commission
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...