×

பகுஜன், ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாடி ஆதரவு

மக்களவைத் தேர்தலில், டெல்லியில் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 12ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி அரசு  காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சித்தது. ஆனால் கூட்டணி அமையவில்லை. இதையடுத்து இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன.  இந்நிலையில், உபி.யில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாடி டெல்லியில் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு  அளிப்பதாக தெரிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் ஆர்.எஸ்.யாதவ் கூறுகையில், ``டெல்லி கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு, சாந்தினி சவுக் ஆகிய  தொகுதிகளில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுக்கும் டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் ஆம்  ஆத்மி வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்க கட்சித் தலைமை முடிவு எடுத்துள்ளது’’ என தெரிவித்தார். டெல்லி, வடமேற்கு டெல்லி தொகுதிகளில் பகுஜன் சமாஜ் போட்டியிடாததால், அந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க  சமாஜ்வாடி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi ,AAP , Bahujan, AAP, Samajwadi, support
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...