×

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஐந்தே நாட்கள் மோடி இன்று இறுதிகட்ட பிரசாரம்: ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது

புதுடெல்லி : டெல்லியின் பிரசித்திப் பெற்ற ராம் லீலா மைதானத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணி காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் சவப்பெட்டியில் இறங்கும் கடைசி ஆணியாகும் என பாஜ மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான விஜய் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 12ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.

இந்த பொதுக் கூட்டம் டெல்லியின் அடையாளமான ராம் லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லியின் நடைபெறும் இது மிகப் பெரிய கூட்டமாக இருக்கும் என்பதால், இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘‘கூட்டத்துக்காக மெகா வடிவ டிஜிட்டல் திரைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. நொய்டா, காஜியாபாத், பரீதாபாத் போன்ற நகரங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் வருவார்கள்‘‘ என விஜய் கோயல்  கூறினார்.

 ‘‘இந்த கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ், ஆம் ஆத்மி அவர்களது  டெபாசிட்களை கூட பெற முடியாது.  இந்த இரு கட்சிகளின் கடைசி அத்தியாயம் அங்கு எழுதப்பட்டு விடும். கூட்டத்துக்கு முன்பாக அனைத்து 272 வார்டு உறுப்பினர்கள், பூத் உறுப்பினர்கள் குழுவின் கூட்டம் நடைபெற்றது. முதல் முறை வாக்காளர்களர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், இஸ்லாமிய பெண்களிடம் அதிகளவில் பேரணியில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Ramlila Maidan , Polling, five days, Modi, campaign
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...