×

அதலபாதாளத்தில் பொருளாதாரம்: சீதாராம் யெச்சூரி சாடல்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘தனது ஆட்சியில் தொடரும் தோல்விகளில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு வேலை வாய்ப்பின்மை, நுகர்வோர் வாங்கும்தன்மை குறைவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் அவரது தொழிலதிபர் நண்பர்களை தவிர வேறு யாரும் பயனடையவில்லை. கடந்த 2014 முதல், அவர்களது ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தையும் தேசப் பாதுகாப்பையும் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும் என்று ஆராயாமல் எடுத்த தவறான முடிவினால், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 176 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sitaram Yechury Satal , Economy in the economy,Sitaram Yechury Satal
× RELATED இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு...