×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஹாலெப்

மாட்ர்இட் : ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டாவுடன் நேற்று மோதிய ஹாலெப் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி (ஆஸி.), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), பெத்ரா குவித்தோவா (செக்.) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Halleb ,round , Halleb , Madrid Open Tennis 3rd round
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து