×

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும்: ஃபிரான்ஸ் வலியுறுத்தல்

பிரான்ஸ்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என ஃபிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மாமன்றத்தில் மிகவும் அதிகாரம் பெற்ற அமைப்பாக பாதுகாப்பு  கவுன்சில் உள்ளது. இதில், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வல்லரசு நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே, ரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளது. ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு நாடுகள் கோரி வந்தது..

கடந்த 2015- ம் ஆண்டு, பான் கீ மூன் ஐ.நா  பொதுச் செயலாளராக இருந்தபோது,  நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது தொடர்பாக வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  வழக்கம்போல சீனா எதிர்ப்பு தெரிவித்தது. வரைவு மசோதாவைத் தோற்கடிக்க சீனா பல உள்ளடி வேலைகளைப் பார்த்தது. இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்ததால் சீனா அடங்கியது. அமெரிக்காவும்  ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் மெளனம் காத்திருநந்தது. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு கிடைத்ததால், வரைவு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான ஃபிரான்சின் நிரந்தர பிரதிநிதி ஃபிராங்காய்ஸ் டெலாட்டர்,  ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகளுக்கும் பிரான்ஸ் ஆதரவு  தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UN Security Council ,India ,France , UN Security Council, India, Permanent Member, France
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...