×

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : 6500 அடி உயரத்திற்கு புகை சூழ்ந்துள்ளால் மக்கள் அச்சம்!

ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதற தொடங்கியுள்ளது. சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சினாபங் எரிமலை இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலை கக்கி வருகிறது. 2016ம் ஆண்டில் இருந்தே இந்த எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. அவ்வப்போது நெருப்புகளை கக்கி வந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் நிலவி வந்த நிலையில் இன்று காலை இது வெடித்தது. இதனால் அப்பகுதியை பெரிய அளவில் புகை சூழ்ந்து இருக்கிறது.

தற்போது எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6500 அடி உயரத்திற்கு பரவி உள்ளது. இதனால் மக்கள் அங்கு கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் அரசு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் இப்போதே அந்த பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதிலிருந்து பெரிய அளவில் நெருப்பு குழம்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indonesia , Indonesia, Sumatra Island, Mount Sinapang Volcano
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்