×

நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

சென்னை: நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எஸ்.இ தேர்ச்சி சதவிகிதம்:

இந்த வருடம் ICSE அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 98.54% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட .03% ஆகும். அதேபோல 10ம் வகுப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதங்கள் வெளியாகியுள்ளன. அதில், 99.89% ஆங்கிலம், 99.89% பெங்காலி, ஹிந்தி 99.89%, 99.93% கன்னடம், மலையாளம் 99.95%, பஞ்சாபி 99. 97%, வரலாறு, சிவிக்குகள் மற்றும் ஜியோகிராபி 98. 69%, கணிதம் 94.04%, அறிவியல் 98.97%, வணிகப் படிப்புகள் 98.42%, பொருளாதாரம் 96.80%, வீட்டு அறிவியல் 100%, உடல் கல்வி 100%, சுற்றுச்சூழல் அறிவியல் 98. 95%, கணினி பயன்பாடுகள் 99.99%, பொருளாதார பயன்பாடுகள் 99.97%, வணிக பயன்பாடு 99.82% என ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.சி. தேர்ச்சி சதவிகிதம்:

ஐ.எஸ்.சி. (12ம் வகுப்பு) தேர்ச்சி விகிதம் 96.21% ஆகும். கடந்த ஆண்டு 96.47 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பில் 7 மாணவர்கள் 99.5% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 17 மாணவர்கள் 99.25 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 99% பெற்று 25 மாணவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. மேலும், 09248082883 என்ற எண்ணுக்கு உங்களது ஐ.சி.எஸ்.இ ஐடி மற்றும் ஐ.எஸ்.சி. ஐடியை டைப் செய்து அனுப்பினால், குறுஞ்செய்தி (SMS) மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 2.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுதி உள்ளனர். ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி.க்கு ஏப்ரல் 30 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தாமதமாக இன்று முடிவுகள் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICSE ,country ,ISCC , ICSE, ISC, Examination Results
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!