×

நாடு முழுவதும் அட்சய திரிதியை கொண்டாட்டம்..... நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: அட்சய திரிதியை நாளையொட்டி சென்னையில் இன்று காலை முதல் தங்க நகை வாங்க பொது மக்கள் ஆர்வத்துடன் நகை கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு 3வது நாளாக வரும் திரிதியை தினம் அட்சய திரிதியையாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த தினத்தில் வழிபாடு செய்து எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருள்  இல்லத்தில் குறைவின்றி பெருகும் என்பது நம்பிக்கை. எனவே ஆண்டுதோறும் அட்சய திரிதியை தினத்தில் மக்கள் ஆர்வத்துடன் நகைகடைகளுக்கு சென்று தங்கம், வெள்ளி நகைகளை வாங்குவர். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை மாதம் 25வது நாளான இன்று அட்சய திரிதியை வந்துள்ளது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் உள்ள நகைகடைகள் காலை முதலே திறந்துள்ளன. பல்வேறு கடைகளில் நகை வாங்க கடந்த ஏப்ரல் 28ம் தேதியே டோக்கன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நகை வாங்க மக்கள் தி.நகரில் உள்ள நகைகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்றயை தினம் நள்ளிரைவு வரை மக்கள் நகை வாங்க கடைகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தி.நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இதனிடையே கடந்த ஆண்டை விட இந்தாண்டு அட்சய திரிதியையொட்டி தங்கம் முன்பதிவு மட்டும் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு 150 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இந்தாண்டு 196 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, தொடர்ந்து 18 மணிநேரம் நகை வாங்க உகந்த நேரமாக இருப்பதால் அதிகமாக விற்பனை நடைபெற்று வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebration ,country ,jewelery ,crowd , The typical trinity, jewelry,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!