×

தொலைக்காட்சி, இணையத்தின் உதவியோடு விமானத்தை உருவாக்கிய பாகிஸ்தான் பாப்கார்ன் வியாபாரி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வீட்டிலேயே சிறிய ரக விமானத்தை உருவாக்கிய பாப்கார்ன் வியாபாரிக்கு அந்நாட்டு விமானப்படை சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி முகமது பயாஸ், இரவும் பகலுமாக சம்பாதித்த பணத்தில் 92 கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே விமானப்படையில் சேர வேண்டும் என்ற கனவில் இருந்த இவர், தந்தையின் மரணத்தினால் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் உதவியோடு காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டு சாதாரண சக்கரங்கள், இரும்பிலான இறக்கைகள் கொண்ட எளிமையான விமானத்தை உருவாக்கி பரிசோதித்து உள்ளார்.

சோதனையின் போது விமானம் 3கிமீ தூரம் வரை பறந்ததாகவும் இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது கண்டுபிடிப்பு குறித்து பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி வந்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதோடு வரை பாராட்டி சான்றிதழ் ஒன்றையும் பாகிஸ்தான் விமானப்படை அவருக்கு வழங்கியுள்ளது. மேலும் அவரின் கண்டுபிடிப்பை அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : popcorn dealer ,Pakistani , Pakistan, Popcorn, Dealer, Certificate, Air Force Pressure, Aircraft
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு