×

மீண்டும் 3வது அணிக்கான முயற்சி பினராய் விஜயனை சந்தித்தார் கேசிஆர்: அடுத்த வாரம் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் (கேசிஆர்), மத்தியில் பாஜ, காங்கிரஸ் அல்லாத 3வது கூட்டணியை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதற்கான பணிகளை மக்களவை தேர்தலுக்கு முன்பாக தொடங்கிய அவர், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் காரணமாக, 3வது கூட்டணிக்கான முயற்சிகளை கேசிஆர் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.ஆனாலும், தேர்தல் முடிவுக்குப் பின் 3வது கூட்டணி நிச்சயம் உதயமாகும் என டிஆர்எஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சந்திரசேகரராவின் மகளும், எம்பியுமான கவிதா அளித்த பேட்டியில், ‘‘மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ 120+ தொகுதிகளை வெல்லும்பட்சத்தில், ஆட்சி அமைப்பதில் 3ம் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக, பாஜ, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத முக்கிய பிராந்திய கட்சிகளுடன் டிஆர்எஸ் பேச்சு நடத்தி வருகிறது’’ என்றார்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிய 2 கட்ட வாக்குப்பதிவுகளே எஞ்சியுள்ளநிலையில், சந்திரசேகர ராவ் மீண்டும் 3ம் கூட்டணிக்காக முயற்சியை கையிலெடுத்துள்ளார். அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராய் விஜயனை விரைவில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, கேரளாவுக்கு நேற்று சென்ற சந்திரசேகர ராவ் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த வாரம் மே 13ம் தேதி சந்திரசேகர ராவ் சென்னை வர உள்ளார். அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேச உள்ளார். அதோடு கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் போனில் சந்திரசேகர ராவ் பேச இருப்பதாககூறப்படுகிறது. தமிழகம் வரும் சந்திரசேகர ராவ் ராமேஸ்வரம், ரங்கம் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு தெலங்கானா புறப்பட்டுச் செல்வார் என தெலங்கான முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு கூறுகிறது.இதன் மூலம், 3ம் கூட்டணி குறித்து பேச்சுமீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KSR ,meeting ,MK Stalin ,Pinarayi Vijayan ,KCR , 3rd team, Kannir ,meets, MK Stalin
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...