×

கட்டுமான அனுமதிக்கு ஷெல்டர் கட்டணம் விதிக்கும் சட்டப்பிரிவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நிலத்தை மேம்படுத்தவும், கட்டுமானங்கள் கட்டவும், அனுமதி அளிக்கும்போது, நிலங்களின் வழிகாட்டு மதிப்பீட்டில் 1% தொகையை ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துவதற்கான ஷெல்டர் நிதியத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையின் அடிப்படையில், ₹84.75 லட்சம் முதல் ₹3.43 கோடி வரை கட்டணம் செலுத்தும்படி பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்தும், ஷெல்டர் கட்டணத்தை செலுத்த பிறப்பித்த நோட்டீசை எதிர்த்தும் 3 நிறுவனங்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர்  அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், நகர்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தரவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சட்டங்களை இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இருப்பதாக தெரிவித்தார்.  

இதனை ஏற்ற நீதிபதிகள், சட்டப்பிரிவிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். 50% ஷெல்டர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், 50% வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசு ஜூன் 10ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Construction Permit, Shelter Fee, Rule Of Law, No Surveillance
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...