×

இங்கிலாந்தில் புது இளவரசர் பிறப்பு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியருக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இதனையடுத்து இளவரசி  மேகன் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில்  இளவரசி மேகனுக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேகன் மார்க்லேவுக்கு நேற்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. தாயும்-சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Birth ,Prince ,England , England, New Prince, Birth
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா