×

நடத்தை விதிமீறல் புகார்களில் தேர்தல் ஆணைய முடிவு விவரம் அறிய மனுதாரருக்கு உரிமை உள்ளது: முன்னாள் ஆணையர்கள் கருத்து

புதுடெல்லி: மக்களவை தேர்தலில், இம்முறை ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தியும், பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டும் ஓட்டு கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இது பற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் விதிமீறல் எல்லை என்று தெரிவித்தது.  இந்த புகார்கள் மீது ஏகமனதாக முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவர் மோடியின் விதிமீறல் உண்மைதான் என்று கூறியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில்,முன்னாள் தலைமை  தேர்தல் ஆணையர்கள் சிலர் கூறியதாவது: தேர்தல் விதிமீறல் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதா அல்லது பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தெளிவாக குறிப்பிட வேண்டும். முடிவு எடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த விவரத்தை தேர்தல் ஆணையம் மனுதாரருக்கு அளிக்கும் பதில் அறிக்கையில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. இருப்பினும், கருத்து வேறுபாடு குறித்த விவரங்களை பெறுவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : applicant ,election commission ,commissioners , Conduct violation, complaint, election commission decision, former commissioners, opinion
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...