×

பிறப்பு, இறப்பு சான்றுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?: கலெக்டர்களுக்கு விளக்கம் கேட்டு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்

சென்னை: ரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் எம்.அழகர்சாமி என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பம் பற்றி விசாரித்து முடிவு செய்ய காலக்கெடுவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கில் நீதிமன்றம் சில விபரங்களை அரசிடம் கேட்டுள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை பிறப்பு, இறப்பு தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? அவற்றில் எத்தனை விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்கப்பட்டன?.

 அதைத் தொடர்ந்து எத்தனை அப்பீல்கள் தாக்கல் செய்யப்பட்டன?. அந்த அப்பீல் மனுக்களின் நிலை என்ன?. அந்த சான்றிதழ்களை வழங்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? சான்றிதழ்களை வழங்க உயர் அதிகாரிகள் யாரும் வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளனரா?. இந்த விபரங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் வகையில் அனைத்து கலெக்டர்களும் உடனடியாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Collector , Birth, Death Certificate, Collector, Revenue Commissioner, Letter
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...