×

ரயில் கொள்ளையர்களை பிடிக்க டிஜிபி தலைமையில் 300 போலீசார் சோதனை: சங்ககிரி காட்டுப்பகுதியில் விடிய விடிய வேட்டை

சேலம்: சேலம் அருகே தொடர்ச்சியாக ரயில் பயணிகளிடம் வடமாநில கொள்ளையர் நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதால் டிஜிபி தலைமையில் 300 போலீசார் விடிய விடிய காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள மாவெலிப்பாளையம் அருகில் கடந்த 3ம்தேதி இரவு அவ்வழியாக வந்த மைசூர், சேரன், மங்களூரு, ஆலப்புழா ஆகிய ரயில்களில் 10 பயணிகளிடம் 30 பவுன் நகையை வடமாநில கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.
மாவெலிப்பாளையம் பகுதியில் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதால் இந்த இடத்தில் மட்டும் ரயில்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இதனை பயன்படுத்திய வடமாநில கொள்ளையர், அயர்ந்து தூங்கும் பயணிகளை குறி வைத்து தங்களது கை வரிசையை காட்டியுள்ளனர்.இதற்கிடையில் 2வது முறையாக, 5ம்தேதி ஆலபுழா,சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறிய கொள்ளையர்,3 பெண்களிடம் 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர்.அவர்களை ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரத்தியும் பிடிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக ரயில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் இந்த வட மாநில கொள்ளையர்கள் சங்ககிரி, சேலம், ஈரோடு பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு நேற்றுமுன்தினம் இரவு சேலம் வந்தார். கோவை சரக ஐஜி பெரியய்யா,ரயில்வே எஸ்பி ரோகித்நாதன், சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்,ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன்,சேலம் எஸ்பி தீபா கனிக்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதையடுத்து சேலம்,தர்மபுரி,ஈரோடு,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 போலீசாருடன் டிஜிபி சைலேந்திரபாபு கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ள மாவெலிப்பாளையம் காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். டார்ச் லைட் வெளிச்சத்துடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். 12 மணிக்கு துவங்கிய இந்த சோதனை, அதிகாலை 4 மணிக்கு முடிந்தது. எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP ,train robbers , Train robber, DGP chief, 300 police,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...