×

பாலியல் புரோக்கர் கைது: 2 பெண்கள் மீட்பு

அண்ணாநகர்: சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
வேலை தேடி சென்னை வரும் இளம்பெண்களிடம், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், நல்ல சம்பளம் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, சிலர் அவர்களை அழைத்து சென்று அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் தங்க வைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை அமைத்து அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நொளம்பூர், பத்மா தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்வது தெரிந்தது. அந்த வீட்டில் போலீசார் நுழைந்து சோதனை செய்தபோது, பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42), என்ற புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sexual Broker , Sex, broker, arrest
× RELATED பாலியல் புரோக்கர் கைது: 2 பெண்கள் மீட்பு