×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு டாக்டர், நர்சுகளிடம் சிபிசிஐடி விசாரணை: கைதான 5 பேர் ஜாமீன் கேட்டு மனு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் டாக்டர், நர்சுகள் உட்பட 8 பேரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 8 பேர் கைதாகி உள்ளனர்.  வழக்கின் மேற்பார்வையாளராக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை, நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள அலுவலகம் வந்து, விசாரணை நடத்தினார். நாமக்கல் மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதபிரியா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் உட்பட 8 பேரிடம், அவர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை இரவு 7 மணி வரை  நடைபெற்றது.

 நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ்கள் அடிப்படையில் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், கொல்லிமலை, பவர்காடு அரசு ஆரம்ப  சுகாதார  நிலையத்திற்கு நேரில் சென்று, மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே கைதான நர்ஸ் அமுதவள்ளி உள்பட 5 பேர் தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI , Razipuram, Children's, Case , Doctor, nurses
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...