×

கீழ்பென்னாத்தூர் அருகே பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகில் திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு நடுவத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எ.சுதாகர் தலைமையில் நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலாளர் சு.பாலமுருகன், எ.சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கி.பி.6ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல்லை கண்டுபிடித்தனர். இதுகுறித்து சு.பாலமுருகன் கூறியதாவது:  ‘இந்த நடுகல் போரில் இறந்த வீரருக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கல். இந்த கல்லில் உள்ள உருவ அமைப்பானது இடது கையில் வில்லும், வலது கையில் வாளும், இடையில் சிரிய குத்து வாளும், வலது கால் நீட்டியும், இடதுகாலினை மடக்கியும் போருக்கு செல்வது போல் உருவம் அமைந்துள்ளது.

இந்த, வீரனின் வலது புறம் இரண்டு வரியில் எழுத்துக்கள் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த வீரன் ஏதோ ஒரு போரில் சண்ைடயிட்டு இறந்திருக்கலாம் அல்லது குறுநில மன்னனுக்கு மக்கள் நடுகல் எடுத்திருக்க வேண்டும்.
இந்த கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தையும், உருவத்தின் அமைப்பையும் கொண்டு காலத்தை கணக்கிட்டால் இது கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும். என்றார். இந்நிலையில், நடுகல் இருந்த இடத்தை சீரமைத்து தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pallava ,Keebennannathur , Kilpennattur, Pallava period tombstone
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை