×

கடல் சீற்றத்துக்குப்பின் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

குளச்சல்: இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான  பானி புயல் காரணமாக குமரி கடல் பகுதியில் கடந்த வாரம்  பலத்த காற்று வீசும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசைப்படகுகள், கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல் துறைமுக பாலம் பகுதியில் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் பரந்த மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து செல்வர். கடந்த வாரம் குளச்சல் கடல் சீற்றமாக இருந்ததால் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு முழுவதும் சூழ்ந்து நீர்தேங்கி நின்றது. இதனால் மாலை வேளை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மணற்பரப்பில் உட்கார முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதிக்குப்பின் குளச்சல் கடல் பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதையடுத்து கடற்கரை மணற்பரப்பை சூழ்ந்து நின்ற கடல் நீரும் வடிந்துள்ளது.  இயல்பு நிலை திரும்பியதையடுத்து நேற்று மாலை முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற வண்ணம் உள்ளன. இதுபோல நேற்று விடுமுறை நாள் மற்றும் பள்ளி கோடை விடுமுறை என்பதால், மாலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் நீர் வடிந்த மணற்பரப்பு மற்றும் துறைமுக பாலத்தின் மேல்  குதூகலமாக அமர்ந்து பொழுதை கழித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,shore ,outbreak , Sea outrage, colchal beach, concentrated civilians
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்