×

நாடு உதயமாகி 200ம் ஆண்டு கொண்டாட்டம் சிங்கப்பூரில் இருந்து சொகுசு பைக்கில் இந்தியா வந்த தொழில் அதிபர்கள்

தஞ்சை: சிங்கப்பூரைச் சேர்ந்த பாலச்சந்திரன்(56), பன்னீர்செல்வம்(53), அருணகிரி (52) ஆகிய மூவரும் நேற்று தஞ்சை பெரியகோயிலுக்கு   சொகுசு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தஞ்சை பெரிய கோயிலை சுற்றிபார்த்தனர். பின்னர் பெரிய கோயிலின் கட்டிடகலையை  பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர். இதன் பின்னர் கோயிலைவிட்டு வெளியே வந்த அவர்கள் நிருபர்களிடம்  கூறியதாவது: சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம்  இங்கு வந்துள்ளோம். நாங்கள் சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறோம். அங்கிருந்து கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்து, மலேசியா, தாய்லாந்த், மியான்மர், பங்களாதேஷ், திபெத், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தோம். பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே வந்தோம். ஒரு சில இடங்களில் படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.

நாள் ஒன்றுக்கு 400 கிலோமீட்டர் பயணம் செய்கிறோம். தற்போது தஞ்சை பெரியகோயிலுக்கு வந்துள்ளோம். இங்கிருந்து வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு வரும் 8ம் தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்லவுள்ளோம். இதன் மூலம் 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் செல்ல திட்டமிட்டுள்ளோம். நாங்கள் ஓட்டிவந்துள்ள மோட்டார் சைக்கிள் 1800 சிசி சக்தி கொண்டது. சொகுசு காரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளது. ஜிபிஆர்எஸ், கூகுள் மேப், டிவி, ரேடியோ, ஏசி வசதியுடன் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் இந்திய மதிப்பில் ரூ.28 லட்சம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebration ,country ,boutique ,Singapore , சிங்கப்பூர், சொகுசு பைக்,இந்தியா , தொழில் அதிபர்கள்
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...