×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் மனு தள்ளுபடி செய்தது நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு

புதுடெல்லி:  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி ஆனது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு புகார் மனுவை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது தொடர்பாக, மூத்த நீதிபதி பாப்டே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா  மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை மிக ரகசியமாக நடத்தப்படுகிறது.

3 நீதிபதிகள் மற்றும் புகார் கொடுத்த பெண் மட்டுமே விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விசாரணையின்போது, தனது வக்கீலுக்கும் அனுமதி வழங்கக் கோரி புகார் கொடுத்த பெண் வலியுறுத்தினார். அவரது  கோரிக்கை ஏற்கப்படாததால், இந்த அமர்வின் மூலம் தனக்கு நியாயம் கிடைக்காது எனக் கூறி விசாரணையில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணை குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. புகாருக்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் உள் விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொது வெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர். புகார் அளித்திருந்த பெண் விசாரணையில் இருந்து விலகிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan Kokai ,Supreme Court , Judge, Ranjan Kokai, Sexual, Investigative Committee, Judge Bapte
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...