ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலிருந்து மகாராஷ்டிராவை சேர்ந்த 7 பேர் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பக்க பாதி லாரியில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள், 4 ஆண்கள், 1 குழந்தை என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த ஆம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். ஆம்பூர் வட்டாட்சியர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இப்பகுதியில் பலமுறை விபத்து ஏற்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை பலகை வைக்க முன்வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தக்கலை அருகே பரபரப்பு: தாறுமாறாக ஓடி...