ஈரானை எச்சரிக்கும் வகையில் ஈரானில் போர் கப்பல்கள், விமானங்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா!!

தெஹ்ரான் : ஈரானை எச்சரிக்கும் வகையில் விமானம் தாங்கி போர் கப்பல் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துளளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர் கப்பல்கள் அனுப்பி வைக்க காரணம் என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்க படையினர் மீதோ அதன் கூட்டாளிகள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.

ஈரானுடன் போர் தொடுக்க அமெரிக்கா விரும்பவில்லை எனினும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே ஈரானுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஈரான் மீது தடைகளை விதித்தது போன்ற செயல்கள் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தின. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது தடை விதிக்கப்படும் என்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Iran ,airplanes , War ship, sustainable, US, crude oil, imports, Iran
× RELATED சவுதியுடன் பேச்சுவார்த்தைக்குத்...