கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவர் கொலை வழக்கில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: கொலை வழக்கு தொடர்பாக எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் கோயம்பேடு எலுமிச்சை பழம் வணிக வளாகத்தில் ஒரு கொலை சம்பவமானது நடந்துள்ளது. வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்துள்ளார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து, சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை கைது செய்த போலீசார், கோயம்பேடு காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் திருநெல்வேலியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்துள்ளது.

இவர் பல புதினங்கள், பல்வேறு கவிதை தொகுப்புகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சுஜாதா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றவர் ஆவார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய போலீசார், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடந்தார். இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இறந்தவர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. மேலும் அவர், சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்தார் என்ற தகவல் மட்டுமஅ கிடைத்துள்ளது. இதனால் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதுகிறோம். எனவே, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இறந்த மனநோயாளிக்கு வலிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடற்கூராய்வின் அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Author ,Francis Krupa ,Coimbatore , Coimbatore, murdered, writer, Francis Kiruba, arrested
× RELATED ஓசூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்