×

சேலம் ரயில்களில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு : ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன்

சேலம் : தொடர் கொள்ளை காரணமாக ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்லும் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவெலி பாளையத்தில் இருந்து மகுடஞ்சாவடி வரை 100 மீட்டருக்கு 2 காவலர்கள் என இருப்புப் பாதையில் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட போலீசாருடன் கிராம மக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே காவல்துறையின் துணை தலைவர் ஷைலேந்திர பாபு, டிஐஜி பாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கர்னிக்கர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.   

ரயில் கொள்ளை தடுக்கும் வகையில் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து ரயில்களும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரயில்களில் நள்ளிரவில் வட மாநில கும்பலின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மாவெலி பாளையத்தில் இருந்து மகுடஞ்சாவடி வரை 20கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி வட மாநில கொள்ளை கும்பல் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. பயணிகளிடம் இருந்து நகைகளை பறிக்கும் கும்பல் ரயில் மெதுவாக செல்லும் போது கீழே இறங்கி தப்பி விடுகின்றனர். மாவெலி பாளையத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, போலீசார் மீது கற்களை வீசி கொள்ளையர்கள் தாக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனால் தற்போது போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ரயில் கொள்ளைகளை தடுப்பது குறித்து ரயில்வே டிஜிபி ஷைலேந்திர பாபு, சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில்  ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன், சேலம் ரயில்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு, ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbers ,Salem , Series, robbery, railway DIG, Balakrishnan, separate forces, organization
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...