×

ஃபானி புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு...... ஒடிசாவிற்கு ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு

புவனேஸ்வர்: ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசின் புயல் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஃபானி புயலின்போது 38 பேர் ஒடிசாவில் பலியாகினர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி பரிதவித்து வருகின்றனர். ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்றவாறு ஆய்வு செய்தார். அவருடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர்.

புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மோடி கூறியதாவது: ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசின் புயல் நிவாரண நிதியில் இருந்து மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.381 கோடியை  புயல் நிவாரணத்துக்காக ஒடிசா அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.  ஃபானி புயலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது. ஃபானி புயலின் நகர்வுகளை நானும் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். ஒடிசா அரசின் அறிவுரைகளை மக்கள் அலட்சியப்படுத்தாமல் பின்பற்றியதால் உயிர்ச்சேதம் பெருவாரியாக தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,storm ,areas ,Odisha , PM Narendra Modi, fani cyclone
× RELATED பிரதமர் மோடி இன்று ரீமால் புயல்...