×

மதுரையில் நீட் தேர்வு எழுதுவிட்டு ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழப்பு: சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு

சிவகங்கை: மதுரையில் நீட் தேர்வு எழுதுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், அபிராமன் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகளான மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா, நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு வந்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவு தேர்வை எழுதுவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பிகொண்டிருந்துள்ளார். திருபுவனம் அருகே பேருந்தில் சென்றபோது மாணவி சந்தியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் உதவியுடன் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுத சென்ற மாணவி உயிரிழந்ததால் சடலத்தோடு தந்தை கதறி அழுத காட்சி காண்போரையும் கண் கலங்க வைத்தது. தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் மாணவி சந்தியா உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை திருப்புவனம் போலீசில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி மாற்றுத்திறனாளி ஆவார். நீட் தேர்வுக்காக சோதனை என்ற பெயரில் பல்வேறு நெருக்கடிகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வருவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில், தேர்வு எழுதுவிட்டு ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் உயிரிழந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,district ,Tiruchendur , Madurai, NEET Exam, Changeable Student, Death, Sivagangai
× RELATED குற்றால அருவிக்கு வரும்...