×

ஊசிமலை காட்சி முனையில் குவியும் சுற்றுலா பயணிகள்

கூடலூர்: ஊசிமலை காட்சி முனையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 26வது மலை பகுதியில் அமைந்துள்ளது ஊசிமலை காட்சி முனை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஊசிமலை காட்சி முனையை தெய்வமலை கிராம சூழல் சுற்றுலா குழுவால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. கூடலூர்-ஊட்டி பிரதான சாலையில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் உள்ள, இந்த காட்சி முனையில் இருந்து பார்த்தால், கூடலூர் முதுமலை பள்ளத்தாக்கு காட்சிகளையும், தவளை மலை காட்சி முனையையும், பசுமையான வனப்பகுதிகளையும், மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளையும் காணமுடிகின்றது. தற்போது சமவெளி பகுதிகளில் நிலவும் கோடை வெயிலுக்கு இதமாக குளு குளு காலநிலை நிலவுவதால் இந்த வழியாக வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊசிமலை காட்சி முனைக்கு சென்று மேற்கண்ட இடங்களை ரசித்து செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mussoorie , Vusimalai, tourism, tourists
× RELATED முசிறி அருகே கல்லூரில் கூடுதல் நெல்...