×

மன்னர் காலத்து பழங்கால மூலிகை புகை சிகிச்சை: அமாவாசை, பவுர்ணமி நாளில் சிகிச்சை பெற மக்கள் ஆர்வம்

திருச்சி: மணப்பாறை அருகே மன்னர் காலத்து பழங்கால மூலிகை புகை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த சிகிச்சையை பெற பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அழககவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் பழனிசாமி. விவசாயியான இவர் பழங்கால முறைப்படி மூலிகை சிகிச்சை மூலம் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு வைத்தியம் செய்து வருகிறார். மன்னர் காலங்களில் நடைபெற்ற இதுபோன்ற சிகிச்சை முறைகள் தற்போது கேரளாவில் மட்டுமே ஒரு சில இடங்களில் நடைபெறுவதாகவும் குறிப்பிடும் இவர் ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் தங்கள் குடும்பத்தினர் கடந்த 6 தலைமுறைகளாக தொடர்ந்து இது போன்ற சிகிச்சை முறைகளை மக்களுக்கு செய்து வருவதாக கூறுகிறார். தெய்வ நம்பிக்கையோடு இப்பணியை செய்து வரும் இந்த வைத்தியத்திற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டோம் எனக்கூறும் பழனிசாமி, அவரவர் விருப்பத்துக்கேற்ப அளிக்கும் தொகையினை நாங்கள் தெய்வமாக வணங்கும் முருகனுக்கு பங்குனி மாதங்களில் விழா எடுத்து சிகிச்சை பெற வந்தவர்கள் கொடுத்த பணத்தில் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இச்சிகிச்சைக்காக தனியொரு இடத்தில் கொட்டகைபோல் அமைத்து ஒரே நேரத்தில் இரண்டு பேர் வைத்தியம் பெரும் அளவிற்கு குழிவெட்டி, காற்றின் மூலம் புகையை கொண்டு செல்லும் கையால் சுழற்றும் கருவியை பயன்படுத்தி இரண்டு மண்பாண்டங்களின் வழியாக அந்த குழிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழிக்குள் மூலிகைகளை செலுத்தி மேற்கொள்ளப்படும் வைத்தியம் நபர் ஒன்றுக்கு 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை குழிக்குள் அமர்ந்தவாறு சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சைக்கு பின் வெளியே வரும் நபர்கள் மூலிகை சாறுகளை அருந்தி செல்கின்றனர். மேலும் வைத்தியர் பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் மட்டுமே அளிக்கப்படும். இதுபோன்ற சிகிச்சை முறைகளை நான்கு அல்லது ஐந்து முறை எடுத்துக்கொண்டால் உடம்பில் ஏற்படும் வண்டு கடி, வெண் குஷ்டம் பெண்களுக்கான உடல் ரீதியான பிரச்னைகள், தோல் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமடைகிறது. இச்சிகிச்சைக்காக கோவை, திருப்பூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற வருபவர்கள் பலனடைவதாகவும் தெரிவித்தார். மன்னர்கள் காலத்தில் பயன்பெற்ற இதுபோன்ற மூலிகை சிகிச்சை முறைகளை ஒரு சிலரே கையாளுகின்றனர். மேலும் தற்போதுள்ள வறட்சியால் போதிய மூலிகைகளும் கிடைக்க சிரமமாக உள்ள நிலையிலும் தனது தலைமுறை வைத்தியத்தை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பழனிசாமி செய்து வருவது பாராட்டுக்குரியதுதான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : king ,herb smokers ,moon , New moon, puberty, herbal smoke therapy
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்