×

தோனுகால் கிராமத்தில் கால் நூற்றாண்டாக கழிவுநீர் தேங்கும் ஊருணி

* பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு: ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

காரியாபட்டி : காரியாபட்டி அருகே, தோனுகால் கிராமத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கும் ஊருணியால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காரியாபட்டி ஒன்றியத்தில் தோனுகால் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

கழிவுநீர் தேங்கும் ஊருணி: கிராமத்தில் உள்ள ஊருணி அருகே குளியல் தொட்டி உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஊருணியில் தேங்குகிறது. தெருக்களில் சேகரமாகும் குப்பைகள ஊருணியில் கொட்டுகின்றனர். இதில், தேங்கும் கழிவுநீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதி ‘அவுட்’: கிராமத்தில் போதிய வாறுகால், சாலை இல்லை. குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள மின்மோட்டார் பழுதாகி இருப்பதால், அவைகள் கட்சிப் பொருளாக உள்ளன.

 தெருக்களில் அடிபம்பு செயல்படுவதில்லை. பொதுக்குழாய்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியே சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சிலர் வாகனங்களில் வரும் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். குடிநீருக்காக தினசரி 20 ரூபாய் வரை கூடுதல் செலவாவதாக கூறுகின்றனர். மேலும், கிராமத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, ஊராட்சி தனி அதிகாரி பொதுமக்களின் நலன்கருதி, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம மக்கள் கூறுகையில், ‘போதிய வாறுகால், குடிநீர் வசதியில்லை. குடும்பம் ஒன்றுக்கு தினசரி ரூ.20 குடிநீருக்கு செலவழிக்கின்றனர். ஊருணி அருகே குப்பை கொட்டுவதால்  கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.  கால் நூற்றாண்டாக ஊருணி சுகாதாரக்கேடாக உள்ளது. குளியல் தொட்டியில்  இருந்து வெளியேறும் கழிவுநீரை வேறு வழியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஊரணியில் தேங்கும் கழிவுநீரை பெரிய வாறுகால் அமைத்து  வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,sewage ridge ,Dhunukal , Quarter Century,sewage wastes,pond ,kariyapatty,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...