×

ஆண்டிபட்டியில் தடுப்பணை கட்டியதில் பல கோடி முறைகேடு?

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் தடுப்பணை கட்டியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சிகளையும், 150க்கும் மேற்பட்ட சிறு,குறு கிராமங்களையும் கொண்டுள்ளது. இந்த கிராமப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் 100க்கும் மேற்பட்ட வெற்றுக்கல் தடுப்பணைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் மேற்பார்வையில் கட்டியுள்ளனர்.

ஆனால் அவ்வாறு கட்டியுள்ள வெற்றுக்கல் தடுப்பணைகளை ஒப்பந்தகாரர்கள் முறையாக கட்டவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் மேற்பார்வையில் கிராமங்களில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றுக்கல் என்ற பெயரில் கற்களை கொண்டு தடுப்பணைகளை கட்டியுள்ளனர். ஆனால் அரசு கூறியு அளவீடுகளையும் பின்பற்றவில்லை. அரசு கூறிய கற்களை வைத்தும்
தடுப்பணைகளையும் கட்டவில்லை.

ஆனால், ஒப்பந்தகாரர்கள் பணம் சேமிக்கும் எண்ணத்திலேயே பெயரளவுக்கு மட்டுமே தடுப்பணைகளை கட்டியுள்ளனர். மேலும் தடுப்பணைகள் முறையாக கட்டாததால் சில பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தற்போதே சரிந்து காணப்படுகிறது. இதனால் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தடுப்பணை கட்டியதில் பல ஆயிரம் ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உடனடியாக நீர்வரத்து ஓடைகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andipatti , Preventive dam, andipatty, abuse, officials action,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி