×

பட்டிவீரன்பட்டி அருகே தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து

* 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் நாசம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் அடுத்த பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று  வருகிறது.

இத்தென்னை விவசாயத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.  கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. தற்போது சொட்டுநீர் பாசனம் மூலமாகவே தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சி வருகின்றனர். போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் தென்னை மரங்கள் பட்டுபோய் வருகின்றன.

இந்நிலையில் சித்தரேவைச் சேர்ந்த ராமுவேல், சாதிக்பாட்சா ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் அத்திக்குளம் பகுதியில் உள்ளது. வறட்சியின் காரணமாக தென்னந் தோப்புகளில் தென்னை மரங்கள் பட்டுபோய் உள்ளன. இந்த காய்ந்த மரத்தின் தென்னை மட்டைகளில் உள்ள ஓலைகள் அருகே செல்லும் மின்சார கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது.

இதையடுத்து தென்னை மரங்களில் பிடித்த தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவி தென்னந்தோப்பு முழுவதும் தீ பரவியது. இதில் தென்னந் தோப்புகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த ஓலைகள் மற்றும் மட்டைகள் கொழுந்து விட்டு தீயில் எரிந்தன. அக்கம்பக்கம் விவசாய தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது.  இந்த தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kannur ,Pattiviranpatti , coconut trees,pattiveeranpaty, fire accident, dindigul
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...