×

ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து கோர விபத்து: 41 பயணிகள் உடல்கருகி பலி

மஸ்கோ: ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பலியாகினர். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்துமுர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 78 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது. விமானம் தரையிறங்கும் போது எதிர்பாரத விதமாக தீ பிடித்து எரிந்தது.  விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தின் போது விமானம் தீ பிடித்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்தையடுத்து, மாஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia ,passengers , Russian airport, plane
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!