×

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

மும்பை, மே 6: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தியது. மும்பையில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு இப்போட்டி வாழ்வா சாவா ஆட்டமாகும். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், கில் இறங்கினர். இந்த ஜோடி 49 ரன் சேர்த்த நிலையில், 6வது ஓவரை வீச வந்த ஹர்திக் தனது முதல் பந்திலேயே கில்லை (9) வெளியேற்றினார். ஹர்திக் தனது அடுத்த ஓவரில் லைன் (41 ரன், 29 பந்து) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் (3), அதிரடி வீரர் ரஸ்ஸல் (0) இருவரும் மலிங்கா வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா தடுமாற்றம் கண்டது. 73 ரன்னில் 4 விக்கெட் இழந்த நிலையில் உத்தப்பா, ரானா ஜோடி ஓரளவுக்கு தாக்குபிடித்தது. வேகமாக ரன் சேர்த்த ரானா (26 ரன், 13 பந்து) மலிங்காவிடம் வீழ்ந்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அடுத்ததாக 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. மும்பை இந்தியன் சார்பில் டிகோக்கும் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டிகோக் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 23 பந்துகளை சந்தித்து 30 ரன் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதையடுத்து ரோகித் சூர்யகுமார் யாதவ் ஜோடி 16.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது ரோகித் 55 ரன்களுடனும் யாதவ் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai Indians ,Kolkata , Kolkata, defeat, Mumbai Indians, win
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.