×

நீட் எழுதிய மாணவர்களிடம் தீவிரவாதிகளை போன்று சோதனை நடத்துவதா?: முத்தரசன் கடும் கண்டனம்

வேலூர்: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவ, மாணவிகளை தீவிரவாதிகளை போன்று சோதனை நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அதிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நேற்று நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட்  மாநில  செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தல், நடந்து முடிந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி  பெறும்.
தோல்வி பயத்தால் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை அதிமுகவினர் தகுதி நீக்கம் செய்ய உள்ளனர். இதற்காக சபாநாயகர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

மக்களை சந்திக்க  அதிமுகவிற்கு பயம் உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர்.தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும் இதுவரை வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே, தமிழக அரசு குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.  தமிழகத்தில் நீட் தேர்வை எழுதச் சென்ற மாணவ, மாணவிகளை தீவிரவாதிகளை போல சோதனை செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்  கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : testers ,terrorists ,Mutharasan , Neid, students, ,terrorists, Mutharasan
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...