×

திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய இலங்கை வாலிபர் கைது: உளவுத்துறை தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த  இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவனந்தபுரம்  தம்பானூரில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர்  சுற்றிக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார்  அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்  முன்னுக்கு பின் முரணாக  பேசியுள்ளார். மேலும் அவருக்கு சிங்கள மொழி மட்டுமே தெரிந்திருந்தது.
போலீசார்  அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் இலங்கையைச் சேர்ந்த மலூக் ஜூத்  மில்க்கன் டயஸ்(35) என்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் பாஸ்போர்ட்  உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை.

இதைத்தொடர்ந்து  போலீசார் அவரை திருவனந்தபுரம்  போர்ட் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.இலங்கையில் தொடர்  குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில், கேரளா, தமிழ்நாடு உட்பட  இந்தியாவிலும் தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபடலாம் என உளவுத்துறை  எச்சரித்துள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இலங்கை  வாலிபர்  பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏதாவது சதிச்செயலில் ஈடுபட வந்தாரா என்பது குறித்து மாநில மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,Trivandrum ,intelligence investigation ,bus station , Trivandrum ,bus station,Sri Lankan ,arrested,
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...