மஞ்சூர் அருகே காட்டு தீ 50 ஏக்கர் மரங்கள் சாம்பல்

மஞ்சூர்: நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வறட்சி  நிலவுகிறது. இதனால், காடுகளில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து சருகாக  காட்சியளிக்கிறது. குடிநீர் குட்டைகளும் வறண்டு போயுள்ளது. இதன் காரணமாக  மஞ்சூர்  மற்றும் சுற்றுபுறங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ பற்றி எரிகிறது. இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு மஞ்சூர் அருகே பெரியார்நகர் வனப்பகுதியில் திடீர் என  காட்டு தீ பரவியது. இதனால் அங்கு  புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர்,  தீ  தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில்   ஈடுபட்டனர். நேற்று காலை முற்றிலுமாக தீ  அணைக்கப்பட்டது. எனினும் சுமார்  50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest fire ,Manoor , Forest ,fire ,Manchur
× RELATED நினைவான விவசாயிகளின் கனவு..காவிரி...