×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பல்லாவரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லாவரம் சஞ்சய்காந்தி நகரை சேர்ந்தவர் மணிமாறன் (24), மேளக்காரர். இவரது மனைவி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். மனைவிக்கு உதவியாக அவரது 16 வயது தங்கை, மணிமாறன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது மணிமாறனுக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் நெருங்கி  பழகியுள்ளனர்.

இதை மணிமாறனின் மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், சிறுமி மற்றும் மணிமாறன் திடீரென வீட்டில் இருந்து மாயமாகினர். இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது, மணிமாறன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று, பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Girl, sex, harassment, bokso, arrest
× RELATED பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது