×

அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என அறிவிப்பு ஆந்திராவில் 3 மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு

ஆந்திராவில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். விஜயவாடாவில் முதன்மை தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இன்று காலை 8 மணி முதல் குண்டூர், பிரகாசம், நெல்லூர் ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள 5 வாக்குப்பதிவு மையத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில், நரசராவ்பேட்டை சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிக்கான 94வது எண் வாக்கு மையம், குண்டூர் மேற்கு சட்டப்பேரவை தொகுதி, குண்டூர் மக்களவை தொகுதிக்கு உண்டான 244வது எண் வாக்கு மையம், நெல்லூர் மாவட்டம், கோவ்வூறு சட்டப்பேரவை தொகுதி, நெல்லூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 41வது எண் வாக்கு மையம், சூலூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி, திருப்பதி மக்களவை தொகுதிக்கான 197வது எண் வாக்கு மையம், பிரகாசம் மாவட்டம், எர்ரகுண்டபாளையம் சட்டப்பேரவை தொகுதியும், ஓங்கோல் மக்களவை தொகுதிக்கான 247வது எண் வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேவையான இயந்திரங்கள் அந்தந்த மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர தேர்தல் அதிகாரியும், தேர்தல் பார்வையாளர்களும், பெல் நிறுவன பொறியாளர்களும் அங்கு நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

‘மதியம் 2 மணிக்கு பின்னரே வெற்றி நிலவரம் தெரியும்’

தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதி கூறுகையில், ‘‘23ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் பார்வையாளர்கள், பெல் நிறுவன பொறியாளர்கள் இருக்க உள்ளனர். 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் முன்னிலை விவரங்கள் தெரியவரும். மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும்.

இருப்பினும் முழு விவரம் தெரிய வேண்டும் என்றால் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் எண்ணிய பிறகு விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்க வேண்டி உள்ளது. அந்த முடிவு வெளியாவதற்கு நள்ளிரவு கூட ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது’’ என்றார். முதல் கட்டமாக வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகள்  எண்ணப்படும். இறுதியாக வாக்கு எண்ணிக்கைகள் நிறைவடைந்த பிறகு வேட்பாளர்கள் வெற்றி நிலவரத்தில் குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தால் தேவைப்படும் பட்சத்தில் தபால் ஓட்டுக்களை மீண்டும் ஒருமுறை எனப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,districts , All, voting, tensions, Andhra, today, re-recording
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி