×

சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கும் லாலு மகன்கள்

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகாரில் ஜெகனாபாத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டி வேட்பாளராக போட்டியிடும் சந்திரபிரகாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, ‘‘லாலு சிறைக்கு சென்ற பிறகு கட்சிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள தேஜஸ்வி ஊழல்வாதியாக இருக்கிறார். கட்சியை நடத்தும் முறையே சரியில்லை. நான்தான் லாலுவின் ரத்தம். அவர் தான் எனக்கு குரு. பீகாரில் நான் தான் 2வது லாலு பிரசாத் யாதவ். தகுதியில்லாதவர்களுக்கு எல்லாம் தேஜஸ்வி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்’’ என்றார். தேஜஸ்வி அடிக்கடி உடல் நலனைக் காரணம் காட்டி பொதுக்கூட்டங்களை ரத்து செய்து வருகிறார்.
அதை தேஜ்பிரதாப் யாதவ் மறைமுகமாக சுட்டிக்காட்டி தாக்கி பேசியதை கேட்ட பாஜ தொண்டர்கள், சொந்த கட்சிக்கு அண்ணன், தம்பிகளே சூனியம் வச்சுக்கறாங்க என வருத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sons ,Lalu ,party , Own party, magic, lalu, sons
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...