×

சட்டீஸ்கர் முதல்வர் கருத்து காவி உடை அணிவதால் பிரக்யா சாது அல்ல

போபால்: ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து கொண்டு பைக்கில் சென்ற பிரக்யா தாக்கூர் தற்போது காவி உடை அணிவதால் மட்டும் சாதுவாகி விட முடியாது என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 6 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 29ம் தேதி தேர்தல் நடந்தது. இன்று 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள 16 தொகுதிகளில் அடுத்த 2 இறுதிக் கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இங்குள்ள போபால் மக்களவைத் தொகுதிக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரக்யா தாக்கூரை வேட்பாளராக பாஜ நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பிரக்யா தாக்கூர் பிலாய்கரில் அவரது உறவினருடன் தங்கியிருந்தபோது, ஜீன்ஸூம் டி-சர்ட்டும் அணிந்து கொண்டு பைக்கில் செல்வது வழக்கம். பலரை செருப்பால் அடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்தினார். இவை அனைத்தும் ஊருக்கே தெரியும். மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது காவி உடை அணிவதால் மட்டும் அவர் சாதுவாகி விட முடியாது’’ என்று கூறினார். இதுகுறித்து மாநில பாஜ தலைவர் ஹிதேஷ் கூறுகையில், பாகெல் கூறியது அனைத்தும் பொய்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh ,Chief Minister ,sadhu , Chhattisgarh, chief minister, opinion, saffron dress
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...