×

என்னை தாக்கியதன் பின்னணியில் பாஜ: கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி:  முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் மோதி நகரில் பிரசாரம் மேற்கொண்ட போது வாலிபர் ஒருவரால் தாக்கப்பட்டார். கெஜ்ரிவால் மீது இதுபோன்று ஏற்கனவே பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் 9 வது தாக்குதலாகும். இதில், அவர் முதல்வர் ஆனபின் நடைபெற்ற 5வது தாக்குதல் சம்பவமாகும். இந்நிலையில், இந்த தாக்குதல் என்பது முதல்வர் மீது நடத்தப்பட்டது அல்ல. மாறாக, டெல்லி மக்கள் மீது நடத்தப்பட்டது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: ஒரு சாமானியன் அரசியலுக்கு வருவதை அவர்கள்(பாஜ) விரும்பவில்லை. எனவேதான் நாங்கள் குறிவைக்கப்பட்டுள்ளோம். போலீசார் மிகவும் கவனமான ஸ்கிரிப்ட் தயாரித்து அதனை நிறைவேற்றியுள்ளனர். பாஜவின் விருப்பத்திற்கேற்ப போலீசார் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும், கெஜ்ரிவாலை தாக்கிய நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்கிற போலீசாரின் தகவலையும் ஆம் ஆத்மி மறுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,Kejriwal , Me, background, Bhaj, Kejriwal, interview
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க அவரது மனைவி சுனிதா வாட்ஸ் அப் எண் வெளியீடு