×

காசு குடுத்து கூவுறது எங்களுக்கு தெரியாதா? ஹேமந்த் சோரன் ‘காண்டு’

ஜார்கண்ட் மாநிலத்தில் நான்கு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மே 12, 19ம் தேதிகளில் அடுத்த இருகட்ட தேர்தல்கள் நடக்கின்றன. குளிர் பிரதேசமான அங்கு, தேர்தலால் அனலடிக்கிறது. இந்தமுறை தாமரையை பறித்தே தீரவேண்டும் என்று கங்கணம்கட்டி காங்கிரஸ் ஒரு பக்கம் இறங்கி வேலை பார்க்கிறது என்றால், அதை விட இரண்டு பங்கு அதிகமாக ஜேஎம்எம் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) பார்ட்டிகள் பம்பரமாக சுற்றுகிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை. மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆகவே, இந்த மக்களைவத் தேர்தலை, ஒரு ‘டெஸ்ட் டிரைவ்’வாக கருதி களத்தில் இறங்கியிருக்கிறார் ஜேஎம்எம் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ேஹமந்த் சோரன். காங்கிரஸ், இடதுசாரிகள் என மெகா கூட்டணியுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். மோடியை முன்வைத்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.

‘‘மாநிலத்தின் முக்கியப் பிரச்னையே புதிதாக வந்திருக்கும் வன உரிமைச் சட்டம் தான். இதன் மூலம், 11 சரணாலயப் பகுதிகளில் பூர்வகுடி மக்களை வெளியேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. வன உரிமைச் சட்டத்தால் ஜார்கண்ட்டில் மட்டும் ஒரு கோடி ஆதிவாசி மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யாமல், அவர்களது அடிமடியில் கைவைக்கிறது மோடி அரசு. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். பட்டினியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பேசாமல் வெறும் கோஷம் எழுப்பி திசை திருப்பப் பார்க்கிறார் மோடி. பிரசாரத்தில் அவர் பேசும்போது, மக்கள் கூட்டத்தில் ‘மோடி... மோடி...’ என்று கோஷம் வருகிறது. அவர்களே ஆட்களை செட்டப் செய்து கூட்டி வந்து, மக்கள் கூட்டத்துக்குள் அமர வைத்து இப்படி சவுண்ட் விடச் செய்து சீன் போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரியாதா...?’’ என்று பிரித்து மேய்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hemant Soren , Cash, Goudur, Unknown, Hemanth Soren, 'Gondu'
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி