×

முதல் விக்கெட்டுக்கு 365 ரன் குவித்து கேம்ப்பெல்-ஹோப் உலக சாதனை

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 365 ரன் குவித்து வெஸ்ட் இண்டீசின் கேம்ப்பெல்-ஹோப் ஜோடி உலக சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் அயர்லாந்தில் நடக்கிறது. டப்ளினில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்ப்பெல்-ஷாய் ஹோப் துவக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

சதத்தை கடந்த இருவரும், முதல் முறையாக ஒருநாள் போட்டியில் இரு துவக்க ஆட்டக்காரர்களுமே 150 ரன்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினர். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற உலக சாதனையை படைத்தனர். கடந்த ஆண்டு  ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்-பக்ஹர் ஜமான் படைத்த 304 ரன் சாதனையை முறியடித்தனர். 47வது ஓவரில் கேம்ப்பெல் 179 ரன்னில் (137 பந்து, 6 சிக்சர், 15 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஹோப் 170 ரன்னுடன் (152 பந்து, 2 சிக்சர், 22 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 365 ரன் சேர்த்து புதிய உலக சாதனை நிகழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. 382 ரன் என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. இதுவரை அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல்-சாமுவேல்ஸ் ஜோடி தக்க வைத்துள்ளது. 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு இவர்கள் 372 ரன் சேர்த்தனர். வெறும் 7 ரன்னில் இந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பை கேம்ப்பெல்-ஹோப் தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Campbell-Hope, world record, first wicket
× RELATED 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை...