மும்பை டி20 லீக் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் மகன்

மும்பை: மும்பை கிரிக்கெட் சங்கத்தால் டி20 மும்பை லீக் போட்டி கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. கடந்த போட்டியில் 6 அணிகள் இடம் பெற்று இருந்தன. இந்த ஆண்டு மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், ஐபிஎல் போட்டி போன்று வீரர்கள் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் 2வது சீசனுக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.1 லட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்யப்பட்டு இருந்தார். நேற்று வீரர்கள் தேர்வுக்கான ஏலம் நடந்தது. அர்ஜுனை ஏலம் எடுக்க கடும் போடி நிலவியது.

இறுதியில் மும்பை பேந்தர்ஸ் அணி அதிக பட்ச ஏலத்தொகையான ரூ.5 லட்சத்திற்கு கேட்டது. அதிக பட்ச ஏலத்தொகை கேட்கப்பட்டதால் விதிப்படி புதிய அணிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி புதிய அணிகளான ஆகாஷ் டைகர், ஈகிள் தானே ஸ்டிரைகர்ஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரு அணிகளும் அர்ஜுனை ரூ.5 லட்சத்திற்கு ஏலம் கேட்ட நிலையில் குலுக்கல் முறையில் ஆகாஷ் டைகர் அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டியது. அர்ஜுன் ஆல் ரவுன்டர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai ,T20 league ,Sachin , Mumbai, T20 league, Auction, Sachin's son
× RELATED நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் ரன்...