×

கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் குளறுபடி 11.40 மணிக்கு உள்ளே நுழைந்தால் 1.40 என சிசிடிவில் காட்டுகிறது: காங். வேட்பாளர் ஜோதிமணி புகார்

கரூர்: கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் குளறுபடி உள்ளதால் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமரா 2 மணி நேர வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நேற்று  முன்தினம் அந்த வளாகத்தை பார்வையிட்டார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் செயல்படும் சிசிடிவி கேமராக்கள் 2 மணி நேரம் வித்தியாசமாக செயல்படுவதாக, எங்களின் முகவர்கள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில்,  மே 3ம்தேதி இரவு 11.40 மணியளவில் வந்து பார்வையிட்டோம். அப்போது, சிசிடிவி கேமராவில் நேரம் 1.40 என காட்டியது. இரண்டு மணி நேரம் கூடுதலாக இந்த சிசிடிவி கேமரா செயல்பட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள்  நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இது ஆபத்தானது.இந்த பிரச்னை குறித்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தோம்.  பின்னர்  மே 4ம்தேதி இரவு வந்து பார்த்த போதும், அதே இரண்டு மணி நேர வித்தியாசத்தில்தான் சிசிடிவி கேமரா  செயல்படுகிறது. இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மத்திய தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் விசாரணை நடத்திய  பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karur ,vote counting center ,shows ,Jotimani , Karur's, vote ,CCD: Cong. Candidat,e Jotimani
× RELATED மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு...