×

கடும் தண்டனை இல்லாததே ஆக்கிரமிப்புக்கு காரணம்: வீரப்பன், முன்னாள் பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர்

ஏரிகள் எனத்தெரிந்து தான் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்கு காரணம் அரசியல் வாதிகள் தான். அரசியல் வாதிகள் பணம் பெற்றுக்  கொண்டு ஆக்கிரமிப்புக்கு துணை ேபாகின்றனர். அந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற  வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால் அரசியல் வாதிகள் அவர்களை பாதுகாக்கின்றனர். அந்த இடத்தில் ஒரு கட்சி கொடியை வேறு அரசியல்வாதிகள் வைத்து விடுகின்றனர். அவர்களின் ஆதரவால் தான் பொதுமக்கள் வேண்டுமென்றே  தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர். ஏரிகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதில்லை. அந்த தைரியத்தில் மக்கள் தொடர்ந்து ஏரிகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.  புகைப்பிடிப்பது தவறு, மது குடிப்பது தவறு தான். ஆனால், மக்கள் அதை செய்யாமலா இருக்கிறார்கள். அது போன்று தான் தவறு என்று தெரிந்தும் ஏரிகளில் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். தன்னுடைய சுயநலனுக்காக வருங்கால  சந்ததிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் அப்படி செய்கின்றனர். இந்த அரசுக்கு ஏரிகளை தூர்வாருவது தொடர்பாக தெளிவான எண்ணம் இல்லை. விவசாயிகளிடம் ஏரிகளை தூர்வார கொடுக்காமல், அவர்கள்  கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் பணத்தை வாங்கி சரிவர தூர்வாருவதில்லை; மேலும்,  மணலையும் அள்ளிக்கொண்டு போங்கள் என்று கான்ட்ராக்டரிடம் அரசே கூறுகிறது.

 இதனால், கடைசியில் ஏரியை தூர்வார ஒப்படைத்த பணியின் பலன் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ செல்லவில்லை. தனிப்பட்ட ஒப்பந்த தாரர்கள், அரசியல்வாதிகள் தான் பலனடைகின்றனர். அந்த மக்கள் நலன் தொடர்பான  வேலையிலும் அரசியல் வாதிகள் கமிஷன் பார்க்கின்றனர். எல்லா இடத்திலும் இந்த நிலைமை இருப்பதால் தான் எந்த வேலையும் ஒழுங்காக நடப்பதில்லை. அரசாங்கம் என்பது அதிகாரிகளை கொண்டது. அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு  கட்டுபட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, பொதுமக்களிடம் நீர்நிலை தூர்வாருவது, காப்பாற்றுவது போன்ற பணிகளை  கொடுப்பதற்கு முயற்சி செய்வதில்லை. பொதுமக்கள் முன்வந்தால் கூட ஏரிகளை தூர்வார விடுவதில்லை. இதனால்,  பொதுமக்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டனர்.
 ஒவ்வொரு ஏரிக்கும் பாசன உழவர் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், சங்க உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதிலும் அரசியல்வாதிகள் தான். இதனால், பெரிய மாற்றம் வந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் ஏரியை  தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் கொடுத்தால் கமிஷன் கிடைக்காது. கான்ட்ராக்டர்களிடம் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகத் தான் இவர்களிடம் கொடுக்கின்றனர்.

குடிநீருக்கு மாற்று ஏற்பாடாக கடல் நீர் குடிநீராக்கும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வீராணம், கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு மக்களின் தேவையை இப்போதைக்கு பூர்த்தி செய்கின்றனர். ஆனால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அந்த வசதி இல்லை. எப்போதும் பெய்கிற மழை பெய்தால் போதும். மழை நீர் சேகரிப்பு நடவடிக்கை மாத்திரம் தண்ணீர் சேமிக்க முடியாது. இதனால், 10 சதவீதம் தான் தண்ணீர் சேமிக்க முடியும். 90 சதவீதம் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி  செய்ய முடியும். இப்போது நிறைய தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்திகரித்து இதர தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மக்களுக்கும் இதர தேவைகளுக்கும் கழிவு நீரை சுத்திகரித்து பெறும் நீரை பயன்படுத்தும் நிலை  உருவாகும். மழை பெய்தால் மட்டுமே அனைத்து பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். ஏரியை தூர்வாரும் பணியை விவசாயிகளிடம்  கொடுத்தால் கமிஷன் கிடைக்காது. கான்ட்ராக்டர்களிடம் கொடுத்தால் கமிஷன்  கிடைக்கும் என்பதற்காகத் தான் இவர்களிடம் கொடுக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Veerappan ,PSU Specialist , penalty,occupation, Veerappan, former PWD ,Special Chief Engineer
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...