×

சென்னை மற்றும் நகர்புறங்களில் வாழும் மக்களை தாகத்தில் தவிக்கவிட்டு வெளிநாட்டுக்கு அதிகாரிகள் ஜாலி டூர்: பொதுப்பணித்துறையில் கொந்தளிப்பு

சென்னை: தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வரும்நிலையில் அத்துறையின் முக்கிய அதிகாரிகள் கோடைக்காலத்தில் ஜாலியாக வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  பொதுப்பணித்துறையில் உள்ள மற்ற அதிகாரிகளிடம் ெகாந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்களை கட்டுதல், ஏரி, அணைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  ஏரிகளை தூர்வாருதல், குடிநீருக்கு ஆதாரமான ஏரிகளை பராமரித்தல், குடிநீர் கால்வாய் பராமரித்தல் உள்பட பல்வேறு பணிகளை கோடைகாலத்துக்கு முன்பே ெபாதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து இருக்க வேண்டும். ஆனால், பல  அதிகாரிகள் கமிஷன் பெற்றுக் கொண்டு முடியாத திட்டங்களை முடித்துவிட்டதாக பணத்தை செட்டில் செய்துவிடுகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மேலும் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் கோடைக்கால குடிநீர் பராமரிப்பு மற்றும் தேவைகளை இவர்கள்தான் வகுத்து தர வேண்டும். ஏரி, அணைகளில் தேங்கி உள்ள நீரை எந்த பகுதிக்கு எவ்வளவு திறந்துவிட  வேண்டும். எந்தப்பகுதியில் நீரை நிறுத்த வேண்டும் என்பன உள்பட முக்கிய முடிவுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்துபோனதால் அணைகள், ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனது. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது சென்னையில் மற்ற பகுதிகளை விட நூறு மடங்கு  அதிகமாகவே உள்ளது. இதை சமாளிக்கும் வகையில் நீர் இருப்புக்கு ஏற்ப அணைகள், ஏரிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த சூழ்நிலையில் ஏரிகள், அணைகள் நீர் இருப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அந்தந்த மண்டல  தலைமை பொறியாளர்கள் சார்பில் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது மே மாதம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பொறியாளர்கள் பலர் விடுப்பு எடுத்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, உதவி பொறியாளர் 700 பணியிடமும், 400 உதவி செயற்பொறியாளர் பணியிடமும், 40 செயற்பொறியாளர், 15 கண்காணிப்பு பொறியாளர், 7 தலைமை பொறியாளர்  பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல பொறியாளர்கள் பலர் விடுப்பில் சென்றுள்ளனர்.

இதனால், அவர்களது பொறுப்பு கூடுதலாக மற்ற பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்,  கூடுதல் சுமையால் தவித்து வருகிறோம் என்று பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறும் போது, அவசரகாலங்களில் எப்படி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுகிறதோ. அதே போல கோடைக்காலத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.  ஆனால் பொதுப்பணித்துறையில் குறைந்தது 45 முதல் 60 நாட்கள் வரை பொறியாளர்களுக்கு விடுப்பு தரப்பட்டுள்ளது. தற்போதுள்ள பிரச்சனையை கருத்தில் கொண்டு விடுப்பு தர அனுமதித்து இருக்க கூடாது. ஆனால், துறை தலைமை  அவர்களுக்கு விடுப்பு தந்துள்ளது’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jail ,areas ,Chennai , Living , Chennai, urban ,Foreign Employment
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...